இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையேற்று, பென்னாகரம் சமத்துவ புரத்தில் அமைந்துள்ள குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மிகுந்துள்ள எள்ளு மற்றும் வெல்லம் கலந்த எள்ளு மிட்டாய்களை இன்று வழங்கி தொடங்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு இரும்புச் சத்து குறைபாட்டினால் குழந்தைகளிடையே ஏற்படும் இரத்த சோகையினைக் குறைத்திடும் வகையில் குழந்தைகள் மையங்களுக்கு முன்பருவக் கல்வி பயில வருகை தரும் 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மிகுந்துள்ள எள்ளு மற்றும் வெல்லம் கலந்த எள்ளு மிட்டாய் வழங்கும் இச்சிற்ப்பு திட்டத்தினை முன்னேடியாக செயல்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லூர் வட்டாரம் ஆகிய 2 வட்டாரங்கள் மட்டுமே முன்னோடி வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இதன்படி தருமபுரி மாவட்டத்தில் முன்னோடி வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பென்னாகரம் வட்டாரத்தில் மொத்தம் 177 குழந்தைகள் மையம் உள்ளன. இதில் முன்பருவக் கல்வி பயில வருகை தரும் 2 முதல் 5 வயதிற்குட்பட்ட மொத்தம் 3685 குழந்தைகளுக்கு தலா 20 கிராம் எடையுள்ள எள்ளு மிட்டாய் நாள்தோரும் வழங்கப்படுகின்றது. இச்சிற்ப்பு திட்டமானது நவம்பர் 2021 தொடங்கி வருகின்ற அக்டோபர் 2022 வரை 1 ஆண்டிற்கு செயல்படுத்தப்பட்டு இக்குழந்தைகளுக்கு எள்ளு மிட்டாய் வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இரும்புச் சத்து குறைபாட்டினால் குழந்தைகளிடையே ஏற்படும் இரத்த சோகையினைத் தவிர்த்திடுதல் என்பதால், திட்டம் ஆரம்பிப்பதற்கு முன், திட்டம் ஆரம்பித்த ஆறு மாதங்களுக்குப் பின் மற்றும் திட்டம் முடிவடைந்த பின் என மூன்று முறை இக்குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவினை பரிசோதித்து பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் பயணாளிகளான இக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் எள்ளு மிட்டாய் முழுமையாக சரியான அளவில் தினமும் வழங்கப்படுவதை கள அலுவலர்கள் கண்காணித்து வர வேண்டும் எனவும், அதளை மாவட்ட திட்ட அலுவலர் உறுதிப் படுத்திட வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து மிகுந்த சத்தான உணவுகளையும், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட வற்றையும் தொடர்ந்து வழங்குவதோடு அரசின் சார்பில் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற இரும்புச் சத்து மிகுந்துள்ள எள்ளு மற்றும் வெல்லம் கலந்த எள்ளு மிட்டாய்களையும் நாள்தோறும் தவராமால் குழந்தைகளுக்கு வழங்கி அக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி ஆப. அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.என்.பி.இன்பசேகரன் அவர்கள், பெண்ணாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி கவிதா ராமகிருஷ்ணன் அவர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் திரு.அசோக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் தருமபுரி மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.ஜான்சிராணி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வடிவேலன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.