தருமபுரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வரும் 13-11-2021 சனிக்கிழமை அன்று காலை 9-00 மணிமுதல் 3-00 மணி வரை தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் படிக்காத மற்றும் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பி.இ. படித்த இருபாலரும் உரிய சான்றிதழ் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இந்த முகாமின் சிறப்பு அம்சங்கள் :
- 100 க்கு மேற்பட்ட தமிழகத்தின் முன்னணி தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
- இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு மற்றும் ஆட்சேர்ப்பு.
- தனியார் துறைகளில் உள்ள 6000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.
மேலும் முகாம் அன்று சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை, நகல் மற்றும் கல்விச்சான்று நகல்கள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
பணி நாடுவோர் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். இந்த முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு 04348 - 235006 மற்றும் 04342-233298 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிந்துகொள்ளலாம்.