கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகணாப்பள்ளி ஊராட்சியில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தேவி கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், துணைத் தலைவர் செல்வி பாஸ்கர் முன்னிலை வகித்தார், விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வேட்டி சேலை, புடவை, இனிப்பு ஆகியவை ஊராட்சி மன்ற தலைவரின் செலவில் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பெத்த தாளப் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் அம்சவல்லி வெங்கடேசன், ஜாகீர், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, அகசிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் , கட்டிகாணப்பள்ளி ஊராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் மூர்த்தி, அலுவலக பணியாளர்கள் ஆறுமுகம், மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- - செய்தியாளர் VP. நாகராஜ்