தர்மபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரால் கடந்த 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 50-வது பொன் விழா ஆண்டு தொடங்குகிறது. அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து அவர் பிரமாண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், தருமபுரி மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்னுவேல், தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, நகர எம் ஜி ஆர் இளைஞரணி பொருளாளர் அ.செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், மண்டல செயலாளர் இலட்சுமணன், மாநில கூட்டுறவு பணியாளர்கள் சங்க தலைவர் சின்.அருள்சாமி, வழக்கறிஞர் பிரிவு அசோக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் கோபால், வேலுமணி, விஸ்வநாதன், மதிவாணன், நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், செந்தில்குமார், செந்தில், செல்வராஜ், செல்வம், மகாலிங்கம், அன்பு, முருகன், சேகர், தனபால், கடத்தூர் பேரூர் கழக செயலாளா் சந்தோஷ், தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ம.கோவிந்தசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் எம்.பி.எஸ்.சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், மாவட்ட கழக இணை செயலாளர் செண்பகம் சந்தோஷம், ஒன்றிய குழு உறுப்பினர் சிவன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.