தற்போது பாசிப்பயறு விலை 1 கிலோ ரூ.65/- முதல் ரூ.68/- வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பாசிப்பயறு விலை ரூ.72.75/- என கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் பொறுப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
பாசிப்பயறு கொள்முதல் 12.10.2021 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. பாசிப்பயறு விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.