தர்மபுரி மாவட்ட தெருக்கூத்து பயிற்சி சங்க கூட்டம், நேற்று முன்தினம் அரூர் வருணீஸ்வரன் கோவிலில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய சங்க பொறுப்பாளர்களாக அரூர் வட்டார தலைவர் அப்பாதுரை, துணைத் தலைவர் தீர்த்தகிரி. பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தலைவர் ராஜசேகர் துணைத் தலைவர் சூசை, காரியமங்கலம் வட்டார தலைவராக ராஜா துணைத்தலைவர் சக்திவேல், தர்மபுரி வட்டார தலைவராக முருகன் துணைத் தலைவராக ஆதிமூலம், நல்லம்பள்ளி வட்டார தலைவர் சின்னசாமி துணைத்தலைவராக மாதப்பன், பாலக்கோடு தலைவராக செல்வம் துணைத்தலைவராக முனுசாமி, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி மாவட்ட கலைவிழா மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.