தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் மொரப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தான்செய்யும் தொழிலை தெய்வமாக கருதி ஆயுத பூஜை செய்து மக்களுக்கு கொரானா பற்றி டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வு பலகையை வைத்துக்கொண்டு ஆயுத பூஜை செய்தனர்,
பூஜையில் கொரானா தொற்று வராமல் தடுக்க மாஸ், கை கிளோஸ், டெங்குவை தடுக்க பிளிசிங் பவுடர், டெமோபாஸ், ஆகியவற்றையில் பூஜையில் வைத்துக்கொண்டு விழிப்புணர்வு செய்தனர்.
இப்போது டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில்
- வீட்டைச்சுற்றி தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும்.
- சிமெண்ட் தொட்டி, தரைதொட்டி ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும் .
- டயர் போன்ற பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
- காய்ச்சல் வந்தால் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
என்று விழிப்புணர்வு செய்தனர், இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.