தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலை கிராம பகுதியில் அமைந்துள்ள தீர்த்தகிரி மலை மீது எழுந்தருளியுள்ள ராமாயண கால தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக மரம் சாய்ந்து மின்சார கம்பியின் மீது விழுந்து, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் சாலையில் விழுந்ததால் தற்பொழுது பக்தர்கள் நடந்து செல்லும் சாலை ஒற்றையடி பாதையாக மாறி உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.