அஇஅதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானா பகுதியில் மேடை அமைத்து அஇஅதிமுகவின் 50 ஆவது பொன் விழாவை முன்னிட்டு கழக நிர்வாகிகளுடன் கேக் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அசோக் குமார் ,அவைத்தலைவர் காத்தவராயன் , பொது குழு உறுப்பினர் கிருஷ்ணகிரி மாவட்டம் கேபிம் சதீஷ்க்குமார் , கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் பாலசுப்பிரமணி, சூளகிரி ஒன்றிய குழு அவைத்தலைவர் செல்வம் , துணைத்தலைவர் ஜெயக்குமார் ராஜா, மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் கேசவசெட்டி , மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் கே.சினிவாசஆச்சாரி, சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி ராமன் , விவசாய அணி ஒன்றிய செயலாளர் சின்னார் சித்தய்யன் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- செய்தியாளர் VP. நாகராஜ்.