தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற மாநிலதலைவர் மு.அன்பரசு தருமபுரியில் அளித்த பேட்டி "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலமாநாடு டிசம்பர் 18,19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைக்க சிறப்பு விருந்தினராக அழைக்க இருக்கிறோம். தேர்தல் வாக்குறுதியின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வரை அழைக்கிறோம்.
மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றுவருகிறது அதன் ஒருபகுதியாக தருமபுரியில் மாவட்ட மாநாடு நடைபெற்றுவருகிறது. கடந்த அதிமுக அரசு அரசு ஊழியர் ஆசிரியர்களின் அனைத்து சலுகைகளையும் ,உரிமைகளையும் பறித்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தருமபுரியில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவபேரவை நடைபெற்றது.
பிறகு போராட்டா ஆயத்த மாநாடு மதுரையில் நடைபெற்றது.அப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பறித்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும் என அப்போதைய எதிர்கட்சி தலைவர் தற்போது, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் காணோலி காட்சி வாயிலாக பேசினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களின் நம்பிக்கை பொய்த்துபோகும் வகையில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அவர்கள் அகவிலைப்படியை கூட வழங்க மறுத்துவிட்டார். பறிக்க பட்ட சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை டிசம்பரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் நிறைவேற்ற உறுதியளிப்பார் என நம்புகிறோம்.
அப்படி நம்பிக்கை அளிக்கவில்லை என்று சொன்னால் அடுத்த கட்டம் நாங்கள் உரிமைக்கான போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார், பேட்டியின் போது மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆர்.நடராஜன், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.