மேலும் கோயில் பூசாரி மற்றும் இந்து முன்னணியினரால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பாதுகாப்பு தடுப்பு சுவர் கேட் என்று எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு தடுப்பு சுவர் கூட அமைத்து பாதுகாக்க முடியாத இந்த அறநிலைத்துறை எந்த வகையில் கோவில்களை பராமரிக்க போகிறது பாதுகாக்கப் போகிறது ஏன் உள்ளே நுழைந்தது கோவில் சொத்துக்களை அழிக்கவா அல்லது அபகரிக்கவா?
ஓரிரு மாதங்களுக்கு முன் பாதுகாப்பு சுவர் அமைக்க முயற்சித்து அருகே உள்ள கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது அது இப்படி சிலையை கடத்த தானா அல்லது அறநிலைத்துறை அவர்களுக்கு உடந்தை யா கோவிலை பாதுகாக்க முடியாத கோவில் சொத்துக்களை மீட்க முடியாத அறநிலை துறைக்கு கோவிலில் என்ன வேலை கோவிலை விட்டு வெளியேறலாமே, கோவிலில் உண்டியல் வேண்டும் நகைகள் வேண்டும் கோவிலின் சொத்துகள் வேண்டும் ஆனால் கோவிலுக்கு பாதுகாப்பு வேண்டாமா? இது என்ன நியாயம் என்று பொதுமக்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.
மேலும் இந்த கடத்தலுக்கு சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.