தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கேத்திரெட்டிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி சுற்றுச் சுவர் அருகாமையில் ஊரில் உள்ள கழிவு நீர் செல்லும் கழிவுநீர் கால்வாய் உள்ளது.
இந்த கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பல கழிவுகளால் அடைப்பட்டு தண்ணீர் தேங்கி கொண்டிருப்பதால் அங்கு பயிலும் மாணவர்களுக்கு நோய் வரும் அபாய உள்ளதால் அதை பஞ்சாயத்து நிர்வாகமோ அல்லது தருமபுரி மாவட்ட கலெக்டர் ஆணையிட்டு இதை சுத்தம் செய்து தருமாறு அந்த பகுதி வாழ் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர் மாணவச் செல்வங்களும் கேட்டுக் கொள்கின்றனர்.
- செய்தியாளர் செ .நந்தகுமார்.