பெங்களூரில் இருந்து தர்மபுரி மாவட்டம், தர்மபுரி-அரூர் சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு இன்று விடியற்காலையில் வெங்காயம் ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரி எட்டிப்பட்டி கிராமப் பகுதி பாலத்தை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி 50 அடி ஆழத்தில் உள்ள விவசாய வாழைத்தட்டத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
லாரியை ஓட்டி வந்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்த அரூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.