ஜெயம் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தருமபுரி வாஸன் கண் மருத்துவமனை இணைந்து மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் அக்டோபர் 13 புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மூலமாக நடைபெற்ற இந்த முகாமில் மாணவர்களின் பார்வை குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கண் கண்ணாடி அணியவும், பார்வை குறைபாடுகளை சரி செய்யவும், சரியான பார்வை கிடைக்க தகுந்த உணவுகளை உட்கொள்ளவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கல்லூரி தாளாளர் Dr.K.கோவிந்த் அவர்கள், முதல்வர் திரு.Dr.எழிலன், துணை முதல்வர் திரு.Dr.காமராஜ், நிர்வாக அலுவலர் திரு.கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு.சதீஸ் குமார் மற்றும் திரு.பெருமாள், தருமபுரி வாஸன் கண் மருத்துவமனை மருத்துவர் திரு.சிவக்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.