கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பாக உலக கைகழுவும் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் தலைமையில் நேற்று அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் கைகளை சுத்தமாகக் கழுவுவது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
மேலும் கைகள் கழுவுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர், இணை இயக்குனர் ,துணை இயக்குனர் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ,உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு உலக கைகள் கழுவும் நாளை கடைப்பிடித்தனர்.