Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

வேளாண்மைத் துறை சார்பில் மண்வள அட்டை குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.

பாலக்கோடு வட்டார வேளாளர்மைத் துறையின் கீழ் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கொரவாண்ட அள்ளி கிராமத்தில் நேற்று 07.10.2021 வேளாண்மை இணை இயக்குநர் திருமதி, வசந்தரேகா அவர்கள் தலைமை தாங்கி மண் வள அட்டை குறித்த பயிற்சினை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். மேலும் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சின்னார் அணை உப வடிநில விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கினார்.

பாவக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி. சித்ரா அவர்கள் மண்வள அட்டை இயக்கத்தின் நோக்கம் குறித்தும், மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிர்களுக்கு உரமிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தேவைக்கேற்ப அங்கக மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க வழிவகை செய்வதனால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்கள் மvedணில் இடப்படுவதும் தவிர்க்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுகின்றது என்று விவசாயிகளுக்கு கூறினார். மண் பரிசோதனை நிலைய வேளார் மாய அலுவலர் திரு. எழில்முருகாள்

அவர்கள் மனர் வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வளத்தினை அறிந்து கொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிர்ச்சினைகள் உள்ளதா என்பதை அறிந்து, சீர்திருத்த முறைகளை மேற்கொண்டு, அப்பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இயலும் என்று விளக்கமளித்தார்.

துணை வேளாண்மை அலுவலர் திரு. முருகன் அவர்கள் விவசாயிகள் தங்கள் மண்ணிற்கேற்ற பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்யவும், பயிருக்கேற்ற பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்களை இடவும் மண்வள அட்டை பெரிதும் உதவுகிறது என்றும் இரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிக அளவில் தொழு தழை உரம், பசுந்தாளுரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கவும் மண்வள அட்டை பரிந்துரை செய்யப்படுகிறது என்று கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் பாலக்கோடு வேளாண்மை அலுவலர் திரு.அன்பரசு, உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு. கோவிந்தன், திரு. மாரிமுத்து, திரு. முருகன் மற்றும் அட்மா அலுவலர்கள் திருமதி. மகேஸ்வரி, திரு.கிருஸ்ணமூர்த்தி, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அலுவலர் திரு. கவியரசு,திரு. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884