ஏரியூர் அரசு தலைமை மருத்துவமனையில், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் யூத் எம்ப்ளாயர் அசோஷியேஷன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். இதில் யூத் எம்ப்ளாயர் அசோசியேஷன் உறுப்பினர்கள் 60 நபர்களும், ஏரியூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் 5 மருத்துவர்களும் என மொத்தம் 65 நபர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி மருத்துவர்களும் ரத்ததானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி வட்டார மருத்துவ ஆய்வாளர் ஜெயச்சந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் கார்த்திக், மருத்துவர் முனுசாமி, மருத்துவர் ராமதாஸ், தலைமையாசிரியர் பழனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஏரியூரைச் சேர்ந்த யூத் எம்பிளாயர் அசோஷியேஷன் உறுப்பினர்கள் இந்த ரத்ததான முகாமை நடத்தினர். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, இதில் யூத் எம்பிளாயர் அசோஷியேஷன் உறுப்பினர்கள் 60 பேர் ரத்த தானம் வழங்கினர். இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இரத்ததான முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் இர்பான்.