தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லுக்கு கோவை மாவட்டம் சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். இன்று அதிகாலை ஒகேனக்கல் வந்தவர்கள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு, ஒகேனக்கல் அருவிகளில் குளித்தனர்.
பின்னர் அனைவரும் மாலை சொந்த ஊர் கிளம்பினர், அவர்கள் வந்த வேன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் மலைப்பாதை வளைவில் வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், மற்றும் காவல் துறையினர் இணைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
- செய்தியாளர் இர்பான்.