தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு - அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கராப்பட்டி வார சந்தையில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சந்தை மேம்பாட்டு பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தின் தீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும், சேலம் to திருப்பத்தூர் சாலையிலிருந்து திருவள்ளுவர் நகர் வழியாக எருமியாம்பட்டி பாலம் வரை பாரத பிரதமரின் கிராமபுற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் தல ஆய்வு செய்து, அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும், குறிபிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது அரூர் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் திரு.என் . ஜெகதீஸ்குமார், அரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மா. ஜெயராமன், திரு.கா.தனபால், ஊரக வளர்ச்சி துறை, மொரப்பூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் திரு.பி.எம்.இராமச்சந்திரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.