பென்னாகரத்தில் முதன்முறையாக புத்தகக் கண்காட்சி தொடங்கியது.
இன்று முதல் ஞாயிறு வரை பென்னாகரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.இதில் ஃப்யூவிஷன் கிளப் நிர்வாகி எஸ்.மணிவண்ணன் வரவேற்புரை வழங்கினார்.
தகடூர் புத்தக பேரவை, வட்டார ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் மா.பழனி தலைமை தாங்கினர். வட்டார கல்வி அலுவலர்கள் அ.சுதாகரன்,இரா.அன்புவளவன்,கோ.பழனி.ஃப்யூவிஷன் கிளப்நிர்வாகிகள் ஏ.பசல்ரஹ்மான், உதயகுமார் சின்னசாமி,க.பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மு.நாடாளுமன்ற உறுப்பினர், தகடூர் புத்தக்கப்பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், அவர்கள் புத்தகக் கண் காட்சியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பென்னாகரம் வணிகர் சங்க செயலாளர் எம்.ஏ.என்.கார்த்திக், முதல் புத்தக விற்பனையை பெற்று கொண்டார்.
புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் தகடூர் புத்தக பேரவைத் தலைவர் இரா சிசுபாலன், நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீரமணி, பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர் பெருமக்கள், கவிஞர், எழுத்தாளர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெண்ணாகரம் புத்தகக் கண்காட்சியில் தினசரி மாலை நேரத்தில் இலக்கிய கலந்துரையாடல் மற்றும் நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கினால் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
பென்னாகரம் புத்தகக் கண்காட்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.