தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏழை மாணவ- மாணவிகளுக்கு கடந்த 12 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். பஞ்சமி நில மீட்பு விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு நிலமற்ற ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பட்டியலின மக்கள் மற்றும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு குறித்து மத்திய பாரதிய ஜனதா அரசும், இதன் தாயகமான ஆர்.எஸ். எஸ். இயக்கமும் தனித்தனியாக எதிர்மறையான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக புதிய நியமிக்கப்பட்டனர். அதன்படி தர்மபுரி மேற்கு மாவட்ட தலைவராக எம்.குமார், மாவட்ட செயலாளராக சரண், மாவட்ட பொருளாளராக சத்தியமூர்த்தி, ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.