நல்லம்பள்ளி BDO அலுவலகத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
நல்லம்பள்ளி BDO அலுவலகத்தில் ஆசிரியர் தின விழா பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் 80 வயது முடிந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். பாமக ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜர் வரவேற்றார்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கஸ்தூரி ஏற்புரை வழங்கினார். தமிழ் ஆசிரியர் பரமசிவம் நன்றியுரை உரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் மமக மாநில பொதுச்செயலா ளர் சாந்தமூர்த்தி காமராஜ் மற்றும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்