தமிழ் நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வட்ட செயற்குழு கூட்டம் அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
தமிழ் நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு சி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் திரு. சரவணன் வரவேற்புரையாற்றினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் திரு.கணபதி நன்றி கூறினார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்பில் 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கியமைக்கு தமிழக அரசுக்கு நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு முதலியவற்றை நடத்துமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பழைய ஓய்வு ஊதிய திட்டம்,அகவிலைப்படி உயர்வு,சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயர்வு முதலியவற்றை வழங்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.