உத்தனப்பள்ளியில் மக்களை தேடி இந்திய மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 75வது ஆண்டு சுதந்திரத்தை முன்னிட்டு. மக்களை தேடி இந்திய மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர்.லக்ஷ்மிகாந்த் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஹோமியோபதி பிரிவு மருத்துவர் ஜெயஸ்ரீ மற்றும் செவிலியர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகள் வழங்கினார்.