மின்சாரம் தாக்கி சிறுவன் பலி: போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே பாப்பனாவழசு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், நந்தினி தம்பதியருக்கு அறிவழகன்(7) சத்திய(6) என்ற இரு குழந்தைகள் உள்ளது. நேற்று பக்கத்து வீட்டில் தொங்கியிருந்த மின்சார வயரை பிடித்து விளையாடிய அறிவழகன் மின்சாரம் தாக்கியது சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு பரிசோதனை செய்து மருத்துவர் ஏற்கனவே அறிவழகன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனையிலிருந்து அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.