அரூர் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே எல்லைபுடியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனுசாமி, அம்மாசி தம்பதியரின் மகள் சுஜி(19) இவர் மதுரையில் வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.. தற்பொழுது சொந்த ஊரில் அப்பா, அம்மாவுடன் இருந்து வந்தார். கடந்த 2ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காணாமல் போனார் அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்த கிடைக்கவில்லை இதுகுறித்து நேற்று அரூர் போலீசில் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.