அரூர் அருகே வீச்சருவா உடன் காரில் கஞ்சா கடத்திய 2 நபர் கைது.
தர்மபுரி மாவட்டம் அரூர்- மொரப்பூர் சாலையில் நேற்று முன்தினம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது எட்டிப்பட்டி அருகே மரத்தின் கீழ் கர்நாடகா நம்பர் பிளேட் பொருத்திய சிகப்பு நிற ஸ்கார்பியோ காரை நிறுத்தி ஆறு நபர்கள் வீச்சருவா காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். போலீஸ் வாகனத்தை கண்டதும் தப்பியோட முயன்றனர். இருவரை விரட்டி பிடித்த போலீசார் காரை சோதனை செய்ததில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஆறு வீச்சருவா வைத்திருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட இருவரை போலீசார் விசாரித்ததில் பெங்களூரை சேர்ந்த அன்சர்பாஷா மகன் நயீன்பாஷா(25)கூடுபாஷா மகன் இம்ரான்கான்(24) என தெரிந்தது. தப்பி ஓடும் போது காயமடைந்த சையத்நாவஸ்(30) தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்,சையத்அயாஸ், அப்சல்பாஷா,நவாஸ்பாஷா மூன்று பேர் தப்பி ஓடி உளளனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 6 வீச்சருவாவை போலீஸார் பறிமுதல் செய்தனர் கைது செய்த இருவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.