அரூர் பகுதியில் விளம்பரப் பலகைக் வைக்க கட்டுப்பாடு.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்டிஓ முத்தையன் தலைமையில் நேற்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் வணிகர் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்பொழுது உள்ள விளம்பர போர்டு 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இனி விளம்பர போர்டு வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு ஆர்டிஓ ஆபீஸில் அனுமதி பெற வேண்டும்.
பிளக்ஸ் போர்டு அச்சிடும் கடை உரிமையாளர் அச்சிட வருபவர்களிடம் அரசால் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ள அளவில் மட்டுமே அச்சிட்டு கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்தில் ஸ்டாண்டிங் விளம்பரபோர்டு வைக்க கூடாது. மேலும் குறைந்த உயரத்தில் மட்டுமே பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டும் மீறுபவர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.