மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி ஆர்ப்பாட்டம்.

அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி ஆர்ப்பாட்டம்.
திரிபுராவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மொரப்பூர் ஒன்றிய செயலர் கே.தங்கராசு தலைமை வகித்தார். திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல், முன்னாள் முதல்வர் தசரத் தொப் சிலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, திரிபுராவில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்ட செயலர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, இரா.சிசுபாலன், டி.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது, சி.வேலாயுதம், ஒன்றிய செயலர் ஆர்.மல்லிகா, வட்ட செயலர் சி.வஞ்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad