தருமபுரியில் தியாகியர் பெருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

தருமபுரியில் தியாகியர் பெருவிழா.


தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎச) மற்றும் தமிழ் ஆர்வலர் பேரவை சார்பில் சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழா, மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் விழா மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக தியாகியர் விழாவானது, தருமபுரி நான்குரோடு அருகில் அமைந்துள்ள முத்து இல்லத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமுஎ சங்கத்தின் மாநில குழுவை சேர்ந்த நாகை பாலு அவர்கள் தலைமை தாங்கினார். தகடூர் புத்தக பேரவை தலைவர் இரா.சிசுபாலன் அவர்கள் முன்னிலை வகித்தார்.முன்னதாக புலவர் செ.கோவிந்தராசு அவர்கள் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மகாகவி பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு புலவர்கள் நவகவி, ஜெயராமன், இளங்கோ, மாரியப்பன், வேட்ராயன், வெங்கடேசன், இல.சுந்தரம், பாவை இராமசாமி, பரமசிவம், வனப்பிரியனார், க்ரைசா மேரி, தகடூர் பிறைசூடன், அர்த்தநாரி, அரங்கநாதன், பிரபாகரன், ஜெயா கணேசன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் கவிபாடி உரையாடினர். இதில் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். நிறைவாக துரைசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad