பள்ளிப்பட்டி ஊராட்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மரக்கன்றுகள் வைத்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புங்கன், அரசன், நாவல் உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் வைத்து சிறப்பு செய்தனர்.
இதில் வட்டாட்சியர் திரு.பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வடிவேலன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.குட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. விசாலாட்சிகுட்டி பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திரு.இளஞ்செழியன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தருமபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ம. கோவிந்தசாமி ஊராட்சி செயலாளர் திருமதி.விஜயா, திரு.மாதையன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக