அரூரில் பாரதியார் நினைவு நூற்றாண்டு புகழஞ்சலி
தருமபுரி மாவட்டம், அரூரில் அன்னை தெரசா பேரவை மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது உருவபடத்துக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மகாகவி பாரதியாரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில், மக்கள் நலச் சங்கத் தலைவர் கயிலை ராமமூர்த்தி, தொழில் முதலீட்டாளர் சா.ராஜேந்திரன், பேராசிரியர்கள் அசோகன், பெரு.சுரேஷ், கவிஞர்கள் ரவீந்திரபாரதி, மு.பிரேம்குமார், வஜ்ஜிரம், இலக்கிய ஆர்வலர்கள் அன்னை முருகேசன், இரா.திருவேங்கடம், சிவப்பிரகாசம், உடற்கல்வி ஆசிரியர் பி.பழனிதுரை, கே.சின்னக்கண்ணன், ஜெயசீலன், சண்முகம், இனமுரசு கோபால், ஆர்.டி.ராஜி, என்.காயத்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக