சூளகிரியில் மது போதையால் ஒருவர் உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி டாஸ்மாக் அருகே விவசாய நிலத்தில் ஒரு இறந்த நிலையில் உள்ளதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சூளகிரி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை இறந்தவர் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் இவர் கொத்தனார் வேலை செய்வதாகவும் இவருக்கு அதிகமாக குடிப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீசார் விசாரனையில் நேற்று முழுவதும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி அப்பகுதி போதியில் விழுந்து கிடந்திருக்கிறார் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக