தருமபுரி மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி கணித பேராசிரியர் திரு.சதீஸ் குமார் அவர்களுக்கு செப்டம்பர் 5 ஆசிரியர் தின சிறப்பு விருதாக கல்வி தமிழ் வேந்தர் விருது வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், அக்னி பெண்கள் தமிழ் சங்கம், வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை, கிருஷ்ணகிரி கம்பர் இளைஞர் நற்பணி சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆசிரியர் தின சிறப்பு விருதுகள் 2021 மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி கணித பேராசிரியர் திரு.சதீஸ் குமார் அவர்களின் சமூக சேவைகள், மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம், மாணவர்களிடத்தில் இரத்ததான விழிப்புணர்வு ஆகியவைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
கல்லூரி தாளாளர் Dr.K.கோவிந்த் அவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டுக்களையும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.