மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க வணிகர்களின் நலன் கருதி வணிகர் நல வாரியம் மூலம் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆண்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 40,00,000/-க்கு குறைவாக உள்ள வணிகர்களுக்கு கீழ்க்கண்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்க்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் 15.07.2021 முதல் 14.10.2021 முடிய உள்ள காலத்திற்குள் இலவசமாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயன்கள்:
- உறுப்பினர் இறக்கும் நேர்வில் குடும்பத்தாருக்கு ரூ.1,00,000/
- மாற்று அறுவை சிகிச்சை / சிறுநீரக மாற்று புற்றுநோய்கான அறுவை சிகிச்சை ரூ.50,000/
- பெண் உறுப்பினரின் கர்ப்பப்பை நீக்க சிகிச்சைக்கு ரூ.20,000/
- பங்க் கடை/மூன்று சக்கர வாகனம் வாங்க ரூ.10,000/
- கீமோதெரபி, ரேடியோதெரபி, ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சைகளுக்கு ரூ.15,000/
- ஆண்டு தோறும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு ரூ.5,000/- முதல் ரூ.10,000/- வரை கல்வி நிதி.
- கடைக்கு தீ விபத்து பேரிடர் இழப்பு ரூ.5,000/
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு ரூ.3,000/- முதல் ரூ.25,000/- வரை ஊக்கத்தொகை
- 10/12 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு ரூ.5,000/ ரூ.3,000/- ரூ.2,000/- ஊக்கத்தொகை
யாரெல்லாம் உறுப்பினர் ஆகலாம்?
- ஆண்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.40,00,000/-க்கு குறைவாக உள்ள எந்த ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளர் / பங்குதாரர்.
- உறுப்பினர் ஆவதற்கு GST பதிவெண் அவசியமில்லை, வணிக உரிமம் (Trade license) இருந்தால் போதுமானது விண்ணப்பிக்கும் முறை https://www.tn.gov.in/tntwb/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டம்:
- துணை ஆணையர்(மாவ) அலுவலகம், தருமபுரி (04342 230112)
- தருமபுரி உதவி மையம் ( செல் நம்பர்: 87789 55535)
- பாலக்கோடு உதவி மையம் (செல் நம்பர்: 94424 78977)
- அரூர் உதவி மையம் (செல் நம்பர்: 93601 34300)
கிருஷ்ணகிரி மாவட்டம்:
- கிருஷ்ணகிரி 1 உதவிமையம் (செல் நம்பர் 95789 04464)
- கிருஷ்ணகிரி 2 உதவிமையம் (செல் நம்பர் 96887 69226)
- ஒசூர் வடக்கு 1 உதவிமையம் (செல் நம்பர் 99425 88328)
- ஒசூர் வடக்கு 2 உதவிமையம் (செல் நம்பர் 99524 42352)
- ஒசூர் தெற்கு 1 உதவிமையம் (செல் நம்பர் 94454 18782)
- ஒசூர் தெற்கு 2 உதவிமையம் (செல் நம்பர் 99949 86356)
- ஒசூர் தெற்கு 3 உதவிமையம் (செல் நம்பர் 97902 35075)
மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள சலுகைகளை, வணிகர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.