பாப்பிரெட்டிப்பட்டி அடுத்து பசுவாபுரத்தில் உள்ள அரசு பஞ்சாயத்து நூலகத்திற்கு மின் இணைப்பு இல்லாமல் போட்டித் தேர்வுக்கு தயாரும் இளைஞர்கள் அரைகுறை வெளிச்சத்தில் படித்து வருகிறார்கள் இதனால் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது பற்றி அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று அங்கு படிக்கும் இளைஞர்கள் கூறுகின்றனர் இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு படித்து தயாராகி வருவதால் அந்த நூலகத்திற்கு மின் இணைப்பு வசதி செய்து தருமாறு சமூக ஆர்வலர்களும் புத்தக வாசிப்பு பிரியர்களும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.