Type Here to Get Search Results !

சூளகிரியில் குட்கா கடத்தி சென்ற வாகனம் பிடிப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம்  வழியாக தருமபுரி செல்ல உள்ள பார்சல் ஈச்சர் வாகனம். தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்றபோது குட்கா ஏற்றி செல்வதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை அறிந்த சூளகிரி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகம் விதமாக வந்த ஈச்சர் வாகனத்தை சோதனையிட்ட போலீசார் அதில் ரூபாய் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குட்கா ஏற்றி வந்த  வாகனத்தை பறிமுதல் செய்து குட்கா கடத்தி வந்த மூன்று பேரை சூளகிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies