Type Here to Get Search Results !

3 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு விருப்ப பணி மாறுதல்.

தருமபுரி மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.C.கலைச்செல்வன்.ஐ.பி.எஸ்., அவர்கள் காவலர்களிடம் விருப்பத்தினை பெற்று பணி மாறுதல் வழங்கினார்.

தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய நான்கு உட்கோட்டங்களில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆணையின்படி  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை மற்றும் சைபர் குற்றப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள்  அடங்கிய குழு அமைத்து அதன் மூலம் காவலர்களிடம் விருப்பங்களை கேட்டறிந்து குடியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் பணிமாறுதல் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies