எர்ரன அள்ளிகிராமத்தில் அட்மாதிட்டத்தின் மூலம் வயல் விழாமற்றும் விவசாயகண்காட்சி நடத்துதல்.
தருமபுரிமாவட்டம், பாலக்கோடுவட்டாரம் எர்ரன அள்ளி பஞ்சாயத்தில் மூங்கப்பட்டி கிராமத்தில் அட்மாதிட்டத்தின் மூலம் வயல் விழா (Organization of Kisancosthis) குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது.பாலக்கோடு வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் திருமதி. சித்ரா அவர்கள் வயல் விழாவினை துவக்கிவைத்து விவசயிகளிடம் கலந்துரையாடினார். பின்பு வேளாண் அலுவலர் திரு. அன்பரசு அவர்கள் வேளாண் திட்டங்கள் குறித்துவிளக்கமளித்தார்.
மேலும் எர்ரனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் திருமதி. வளர்மதி க/பெ. சின்னவன் இதில் கலந்துகொண்டார். விழாவின் போது உதவி வேளாண்மை அலுவலர் திரு. முருகன் மற்றும் விஜயன் அவர்கள் கலந்து கொண்டு நன்றியுரைவழங்கினர்.
இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் கீழ் பணிபுரியும் திரு. கவியரசு மற்றும் சுரேஷ் ஆகியோர் செய்தனர். மேலும் இவ்விழாவில் 100
க்கும் மேற்பட்டவிவசாயிகள் கலந்து கொண்டனர்.