தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ப்ரோக்ஸி முறை விற்பனை தவிர்க்கும் வகையில் ப்ரோக்ஸி முறையை விற்பனை முனையத்தில் பதிவு நீக்க செய்யப்பட்டு 100% பயோமெட்ரிக் முறையை அமுல்படுத்த வேண்டும்.
அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் 4ஜி விற்பனை முனையம் (Pos) வழங்கப்பட வேண்டும். மற்றும் 4G சிம் வழங்கப்பட வேண்டும். மேலும் அனைத்து விற்பனை முனைய கருவிகளுக்கும் மோடம் வழங்கப்பட வேண்டும்.
விற்பனை முனையம் பழுது ஏற்பட்டால் பழுது நீக்கும் தொகையை விற்பனையாளர்களிடம் வசூல் செய்வதை கைவிட வேண்டும். கோவிட்-19 கொரோனா தொற்று காலங்களில் கைவிரல் ரேகை பதிவால் நோய் தொற்று பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையில் கண்விழி திரை அடிப்படையில் விற்பனை செய்வதை ஆவண செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமானதாக வழங்கப்பட வேண்டும். ஆகையால் மேற்கண்ட எங்களது நியாயமான கோரிக்கையை கணிவுடன் பரிசீலணை செய்து கோரிக்கையை நிறைவேற்றி தரும் கேட்டுக்கொள்கிறோம். என்று கலெக்டர் திவ்யதரிசனம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது உடன் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட பொருளாளர் ஜான் ஜோசப் மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர் மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் உடன் இருந்தனர்.