Type Here to Get Search Results !

"மக்களை தேடி மருத்துவம்" என்ற சிறப்பான திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற உயரிய இலக்கை அடைய "மக்களை தேடி மருத்துவம்” திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி ஒன்றியத்தில் தொடங்கி வைத்தார்கள்.

இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், தும்பல அள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களை தேடி மருத்துவம்" என்ற சிறப்பான திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், தும்பல அள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாண்புமிகு தமிழ்நாடு முதவமைச்சர் அவர்களின் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் துவக்க விழா இன்று (05.08.2021) நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தினை துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது.

மாவட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற சீரிய திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சுகாதார குழுவினர் மூலம் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், நோய் ஆதரவு சேவை, ஊனமுற்றோருக்கு தேவைப்படும் இயன்முறை சேவை, சிறுநீரக நோயாளிகளில், தொடர்நிலை வயிற்றுச்சவ்வு சுத்திகரிப்பு முறை நோய் உள்ளவருக்கு தேவைப்படும் டயாலிசிஸ் பை வழங்கப்படும் சேவை, தாய் சேய் நலம், தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவரவர் வீடுகளில் சேவை கிடைக்கின்ற வகையில் திட்டம் வகுத்து அதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் துவக்கி வைத்து, இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற சீரிய திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் செயல்படும் வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் முதற்கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியம், தும்பல அள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நமது மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட களப்பணி குழுவில் மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் சுகாதார தன்னார்வலர், நோய் ஆதரவு செவிலியர் (Palliatives stall Nurse) மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் (Physiolllerapist) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திலும் தொற்றா நோய், நோய் ஆதரவு சேவைகள் மற்றும் இயன்முறை சேவைகள் பெற்றுக் கொள்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகள் அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். மற்றவர்களை சார்ந்தோ அல்லது எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், 30 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட தொற்றா நோய் கண்டவர்கள் அந்தந்த துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நடமாடும் மருத்துவ முகாமில் தேவையான சிகிச்சையும் மருந்துகளும் பெற்று கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளுதல், தொற்றா நோயாளிகளை கண்காணித்தல், இரண்டு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்குதல், தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி மேம்படுத்துதல், வயோதிகர்களுக்கு உடல் நலம் மற்றும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பயிற்சி அளித்தல், சிறுநீரக நோயாளிகளில், தொடர்நிலை வயிற்றுச்சவ்வு சுத்திகரிப்பு முறை நோய் உள்ளவருக்கு தேவைப்படும் டயாலிசிஸ் பை ஆதரவு செவிலியர் மூலம் வழங்கப்படும். பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பிறவி குறைபாடு கண்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான மேற்சிகிச்சை பெற ஆலோசனைகள் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பெட்டியும் அதில் மருந்து மற்றும் உட்கொள்ளும் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பான திட்டத்தின் கீழ் காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள 8,774 தொற்றா நோயாளிகள், 96 இயன்முறை சேவைகள் மற்றும் 73 நோய் ஆதரவு சேவைகள் தேவைப்படும் நோயாளிகள் பயன் அடைய உள்ளனர். தற்போது தும்பல அள்ளி அகதிகள் முகாமில் வசித்து வரும் 197 குடும்பங்களில் உள்ள 59 தொற்றா நோயாளிகள், 2 இயன்முறை சேவைகள் மற்றும் இரண்டு நோய் ஆதரவு சேவைகள் தேவைப்படும் நோயாளிகள் பயன் அடைய உள்ளனர். மேலும், இத்திட்டம் தருமபுரி மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் பொழுது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பதிவு செய்துள்ள 52,214 தொற்றா நோயாளிகள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்.

எனவே, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், வயோதிகர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் என்ற இச்சிறப்பான திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து உரிய சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் காரிமங்கலம் ஒன்றியம், தும்பல அள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் முகாமில் தொற்றா நோய் சிகிச்சைக்கான நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், பரிசோதனைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அத்தொற்றா நோயாளிகளுக்கு தனித்தனியாக மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொள்ளும் விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பெட்டிகளை வழங்கினார்கள். 

இவ்விழாவில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பூ.இரா.ஜெமினி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. ராஜேஷ் கண்ணன், காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியர் திரு.சின்னா, தும்பல அள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.கோவிந்தராஜ், மாவட்ட தொற்றா நோய்கள் தடுப்பு அலுவலர் மரு.கே.அனிதாராஜ், மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் மரு.சவிதா, மாவட்ட உதவி திட்ட மேலாளர் மரு.கார்த்தி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பி.கிருஷ்ணன், திருமதி.சி.கலைச்செல்வி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் திரு.கே.சுப்பிரமணி, மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் திருமதி.பார்கவி, வட்டார மருத்துவ அலுவலர் மரு. அனுராதா, நேர்முக உதவியாளர் (துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்) திரு.ஜம்புலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies