Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை.

Top Post Ad

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

ஊரடங்கு காலத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை புனஸ்காரங்கள் கோயில் அலுவலர்களால் மட்டும் நடத்திக் கொள்ளவும், பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் உட்பட அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயில்கள், தருமபுரி, வே.முத்தம்பட்டி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், ஒகேனக்கல் அருள்மிகு தேசநாதேஸ்வரசுவாமி திருக்கோயில், தா.அம்மாப்பேட்டை அருள்மிகு சென்னியம்மன் திருக்கோயில், தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து பிராதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகை
திருவிழாவை முன்னிட்டு 01.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 03.08.2021 (செவ்வாய்க்கிழமை) வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. 

மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஒகேனக்கல், காவேரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை. மேலும், ஆகமவிதிப்படி சுவாமி
அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சர்கள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies