தருமபுரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், புதுப்பட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் கேட்பாரற்று கிடந்த 58 மூட்டைகள் கொண்ட சுமார் 3 டன் பொது விநியோகத்திட்ட அரிசியை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் திரு.பாலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினரால் பொது விநியோகத் திட்ட அரிசியை கைப்பற்றுகை செய்யப்பட்டு, பென்னாகரம் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப
கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
சாலையோரம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் கிடந்த பொது விநியோகத்திட்ட அரிசி மூட்டைகளை அந்த பகுதிக்கு கொண்டு சென்றவர்கள் யார்?கடத்தலுக்காக அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றனர்.