15 ஆண்டுகள் பராமரிப்பு இல்லாத கிராம சாலை; சீரமைக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

15 ஆண்டுகள் பராமரிப்பு இல்லாத கிராம சாலை; சீரமைக்க கோரிக்கை.

தருமபுரி மாவட்டம் இராமியம்பட்டி கிராமத்தில் முக்கிய பகுதி ராஜ வீதி சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதி. இந்த சாலை சுமார் 15ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது, இந்த சாலை வழியாக தாதனூர், குருபரஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இராமியம்பட்டி மற்றும் அரூர் செல்ல பயன்படுத்திவருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பிடிமானம் இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad