சென்னை பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அறிவுரைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P.NO.9295/2020 இதர தொகுப்பு வழக்குகளில் 17.02.2020 இல் வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பாணையின் படி இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் முதலில் 40 சதவிகித கல்விக்கட்டணத்தை 31.08.2021-க்குள்ளும் பின்னர் 35 சதவிகித கட்டணத்தை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்குள்ளும் மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை அரசின் மறு உத்தரவிற்கு பின்பு மட்டுமே மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.
இதற்கு மாறாக 2021-2022 ம் ஆண்டிற்கான முழுக்கல்விக்ககட்டணத்தையும் செலுத்திட எல்.கே.ஜி முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நிர்பந்தம் ஏதும் செய்யக்கூடாது என தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் முதல்வர்களுக்கு இவ்வலுவலக கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி 100 சதவிகித கல்விக்கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் நிர்பந்தம் செய்தால் அது குறித்தான புகாரினை dpimatric@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தருமபுரி மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் திருமதி.ந.கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

