அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு இன்று காலை 12:35 மணி அளவில் மொரப்பூர் அருகில் உள்ள மருதிப்பட்டி மோட்டூர் கிராமத்தில் உள்ள விவசாயி வினோத் குமார் தகப்பனார்/பெயர் சின்னுக்கவுண்டர் என்பவரின் சுமார் 90 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் மாடு ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் மா.பழனிசாமி அவர்கள் தலைமையில் குழுவினருடன் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மாடு ஒன்று எவ்வித காயமும் இன்றி உயிருடன் மீட்கப்பட்டது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது மாட்டின் விலை ₹50,000 ஆகும்.

