இரவில் சமூக விரோதிகள் கூடாரமாகும் CEO அலுவலக மைதானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இரவில் சமூக விரோதிகள் கூடாரமாகும் CEO அலுவலக மைதானம்.

 


கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்(CEO) வளாகம் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக இருக்கின்றது.கிருஷ்ணகிரி மாவட்ட CEO, DEO அலுவலகங்கள் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது கொரோனோ பிரட்சனை தொடங்கியதிலிருந்து காய்கறி மார்க்கெட் இந்த மைதானத்தில் செயல்படுகின்றது. 


இதனால் இரவு நேரத்தில் வியாபாரிகள், சரக்கு வாகன ஓட்டிகள் இங்கு தங்குகின்றனர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக  பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க இரவில் காவலை தீவிரபடுத்த வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad