Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு; கல்லூரி முதல்வர் அறிக்கை.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 26.07.2021 முதல் இளநிலை பட்ட படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது, தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு 26.07.2021 அன்று தொடங்கியது, வரும் 10.08.2021 ம் தேதிவரை விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம் என அரசு கலைக் கல்லூரி தருமபுரி முதல்வர் முனைவர். ப. கி. கிள்ளிவளவன் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 26.07.2021 முதல் 10.08.2021 வரை www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதளங்கள் வழியே, மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம், நேரலையில் விண்ணப்பிக்க 48 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகவும், 2 ரூபாய் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணத்தை ஆன்லைன் பண பரிவர்த்தனை வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். இணைய தளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக அரசு கலைக்கல்லூரி தருமபுரியில் மாணவர் சேர்க்கைகான வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் தேவைப்படும் மாணவ மாணவிகள் இம்மையத்தை பயன்படுத்தி கொரோனோ (SOP) வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றியும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 27.07.2021 இன்று தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர்.C. ஜோதிவெங்கடேஸ்வரன் அவர்கள் ஆன்லைன் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை ஆய்வு செய்தார். மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 9345329369 மற்றும் 9994891936 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884