Type Here to Get Search Results !

போலீஸின் மண்டை உடைப்பு; இராணுவ வீரர் தலை மறைவு.

காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். 


சக்திவேல் நேற்று காலை பஞ்சாப்பில் இருந்து காவேரிப்பட்டணத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும், சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதால், தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வா எனக்கூறி விஜயலட்சுமியை சரமாரியாக தாக்கி சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதையடுத்து, காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் கணவர் சக்திவேல் கொலைமிரட்டல் விடுப்பதாக விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக, சக்திவேலை வீட்டில் இருந்து அழைத்து வருமாறு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவை அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஒரு ஆட்டோவில் குண்டலப்பட்டியில் உள்ள சக்திவேல் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த சக்திவேலிடம், புகாரின் பேரில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், தன்னுடன் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினார். அதற்கு சக்திவேல் எதற்காக வர வேண்டும்? என கூறி வாக்குவாதம் செய்தார்.


அப்போது, அங்கு வந்த சக்திவேலின் தம்பி யேசு (37) என்பவருடன் சேர்ந்து சக்திவேல், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவை கல்லால் தாக்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டி கீழே சரிந்து விழுந்தார்.


அப்போது, போலீஸ்காரருடன் வந்த ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் கல்வீச்சு தாக்குதலை தடுத்த போது, ஆட்டோ டிரைவருக்கும் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, சக்திவேலும், யேசுவும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைதொடர்ந்து, சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவும், ஆட்டோ டிரைவர் ராஜாவும் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.


இந்த சம்பவம் குறித்துகாவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய யேசுவை கைது செய்தார். மேலும் தலைமறைவான சக்திவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்


குடும்ப தகராறில் விசாரணைக்குச் சென்ற சப்- இன்ஸ்பெக்டக்டரின் மண்டையை ராணுவ வீரர் உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies