Type Here to Get Search Results !

3 தற்கொலைகள்; காவல்துறை விசாரணை.

ஓசூர் பகுதியில் மூன்று தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.


சம்பவம் - 1.

ஓசூர் கோகுல்நகர் அடுத்த குப்புசாமி நகரை சேர்ந்த ஸ்ரீ அபூர்வா (வயது 32).- அருண்குமார் தம்பதி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி ஸ்ரீ அபூர்வா தனது மகனின் பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கணவரிடம் கூறினார். அதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீ அபூர்வா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீ அபூர்வா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் வேறு கரணங்கள் இருக்குமோ என்ற கோணத்திலும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியும் விசாரணை நடத்தி வருகிறார்.


சம்பவம் -2.

ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி விஜயவாணி (27). விஜயவாணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சம்பவம் -3.

ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் சரவணன் (37). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies